புகைப்பட கண்காட்சி


புகைப்பட கண்காட்சி
x

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறை


மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழக அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடி கல்வி திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், காலை உணவு, புதுமைப்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம் உள்ளிட்ட திட்டப்படங்கள் விளக்கத்துடன் இடம்பெற்றிருந்தன. மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள், மீண்டும் மஞ்சப்பை, புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் உள்ளன. இந்த புகைப்பட கண்காட்சியை 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story