கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி


கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
x

உலக சுற்றுலா தினத்தையொட்டி வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

வேலூர்

உலக சுற்றுலா தினத்தையொட்டி வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற கருத்தினை மையமாக கொண்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் உலக சுற்றுலா தினவிழா, கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) இளமுருகன் தலைமை தாங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதனையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் கொண்ட புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

விழாவில் வி.ஐ.டி. ஓட்டல் மேலாண்மை மற்றும் சுற்றுலா துறை மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, அருங்காட்சியக வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இதில் பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.


Next Story