பாளையங்கோட்டையில் புகைப்பட கண்காட்சி


பாளையங்கோட்டையில் புகைப்பட கண்காட்சி
x

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பாளையங்கோட்டையில் புகைப்பட கண்காட்சி நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு சென்னை மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்தது. 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி அண்ணா சட்டசபையில் தமிழ்நாடு என அறிவித்து அழைக்கப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாள் விழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேரணியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

பேரணியானது பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி மாவட்ட தலைமை நூலகம், சேவியர் கல்லூரி வழியாக ஜான்ஸ் பள்ளியை சென்றடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகளின் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடந்தது. இதைத் தொடர்ந்து ஜான்ஸ் பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

மேலும் கல்வி வளர் தமிழ்நாடு வாழ்க என்னும் தலைப்பில் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், தொழில் வளர் தமிழ்நாடு வாழ்க என்னும் தலைப்பில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், சமூக நீதி வளர் தமிழ்நாடு வாழ்க என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. வையத் தலைமை கொள் என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும், தமிழி என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை போட்டிகள் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சுகன்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, ஜான்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன், தமிழ் வளர்ச்சி துறை கண்காணிப்பாளர் சீலா ஜெபரூபி, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பாளையங்கோட்டையில் புைகப்பட கண்காட்சி நடந்தது.தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பாளையங்கோட்டையில் புைகப்பட கண்காட்சி நடந்தது.


Next Story