ராணிப்பேட்டையில் புகைப்பட கண்காட்சி


ராணிப்பேட்டையில் புகைப்பட கண்காட்சி
x

ராணிப்பேட்டையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்குகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்குகிறது.

ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஓயா உழைப்பின் ஓராண்டு என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு துறைகளில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்த 75 புகைப்படங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் மற்றும் தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்த 25 புகைப்படங்களும் என மொத்தமாக 100 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சி இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி இன்று மாலை 4 மணி அளவில் திறந்து வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story