சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி


சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி
x

திருப்பத்தூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இந்திய நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்களின் உருவப் படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் தியாகங்கள் குறித்து இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டு நமக்காக சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களின் சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) மு.ஜனார்த்தனன் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story