சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி


சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி
x

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி அமைப்பு.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வேலூர் மாவட்ட சுதந்திரபோராட்ட தியாகிகள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மேலாளர் (பொது) பாலாஜி, (நீதியியல்) பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story