'ஜாலியன் வாலாபாக்' படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சி


ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சி
x

பழனி அருங்காட்சியகத்தில் ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

திண்டுக்கல்

பழனியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை பழனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் என பலர் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த மாதம் சுதந்திர போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதை பழனி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 26-ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளின் வரலாறு சார்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் இதை கண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.


Next Story