கள்ளக்குறிச்சியில் இன்று புகைப்பட கண்காட்சி


கள்ளக்குறிச்சியில் இன்று புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 8:36 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

சென்னை மத்திய தகவல் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கள்ளக்குறிச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சண்முகா திருமண மண்டபத்தில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம், யோகா, சுற்றுச்சூழல், சிறுதானியங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலவாழ்வு திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் மற்றும் புகைப்பட கண்காட்சி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 16-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு அரங்குகள் காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் கருத்தரங்கம், மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பாக துணை இயக்குனர் சிவகுமார் இருந்தார்.


Next Story