கோணான்குப்பத்தில்புனித பெரிய நாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனிஏராளமானவர்கள் பங்கேற்பு


கோணான்குப்பத்தில்புனித பெரிய நாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனிஏராளமானவர்கள் பங்கேற்பு
x

கோணான்குப்பத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

பெருவிழா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித பெரியநாயகி அன்னை சொரூபம் வைக்கப்பட்டது.

அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பங்குத் தந்தை தேவ. சகாயராஜ் தலைமையிலான குழுவினர் வரவேற்பு அளித்தனர்.

ஆடம்பர தேர்பவனி

அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியை புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், பங்கு தந்தையர்கள், பாளையக்காரர் பொன்னம்பல கணேஷ் கச்சிராயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆடம்பர தேர் பவனியாக ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மோகன் மற்றும் ஆலய ஊழியர்கள், விழாக்குவினர், மக்கள் பிரதிநிதிகள், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணி தேவ சகாயராஜ், உதவி பங்கு தந்தை அருட்பணி அந்தோணி ராஜ் மற்றும் புனித பெரியநாயகி அன்னை ஆலய விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story