மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்


பேராவூரணி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் பேராவூரணி ஒன்றிய ஆணையர் தவமணி தலைமையில் நடந்தது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தங்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்காத நபர்களுக்கு உடனடியாக அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. முகாமில் ஒன்றியம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பேராவூரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலியபெருமாள் (100 நாள் வேலை திட்டம்) ஆலோசனையின் பேரில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story