அரசுபஸ் முன்பு பிணத்தை வைத்து மறியல் போராட்டம்


அரசுபஸ் முன்பு பிணத்தை வைத்து மறியல் போராட்டம்
x

வாணியம்பாடி அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஆத்திரமடைந்த உறவினர்கள் பஸ் முன்பு பிணத்தை வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஆத்திரமடைந்த உறவினர்கள் பஸ் முன்பு பிணத்தை வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாடு ஆக்கிரமிப்பு

வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டை, குட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). ஹாலோ பிரிக்ஸ் கல் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் வெங்களாபுரம் பகுதியில் வேலை செய்துவிட்டு, ஆவாரங்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, புத்துக்கோவில் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது, சுடுகாட்டுக்கான இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து அதில் வேலி அமைத்துள்ளார். அவர், ஜெயக்குமாரின் உடலை புதைக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

பிணத்துடன் மறியல்

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவ்வழியே வந்த அரசு பஸ் முன்பு ஜெக்குமாரின் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி தாசில்தார் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் அம்பலூர் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இது குறித்து புகார் அளிக்கப்பட்டால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு ஏற்கனவே தயாராக இருந்த இடத்திலேயே உடலை புதைத்தனர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story