சாலையில் கற்களை வைத்து மறியல்


சாலையில் கற்களை வைத்து மறியல்
x

வாணாபுரம் அருகே விவசாயியின் மனைவி சாலையில் கற்களை வைத்து வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்தார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே விவசாயியின் மனைவி சாலையில் கற்களை வைத்து வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்தார்.

விவசாயி கொலை

வாணாபுரம் அருகே உள்ள எடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 52), விவசாயி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (58) என்பவர் கூலி ஆட்களை வைத்து வீராசாமியை கட்டையால் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது ெசய்தனர். பின்னர் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

வீராசாமியின் நிலத்தின் அருகில் சுப்பிரமணிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதனால் சுப்பிரமணி நிலத்தில் இருந்து விவசாய தானியங்கள் வீராசாமியின் நிலத்தின் அருகே செல்லக்கூடிய பாதை வழியாக தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

சாலையில் கற்கள்

இந்த நிலையில் இன்று சுப்பிரமணிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து தானியங்களை அறுவடை செய்து வெளியே எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த வீராசாமியின் மனைவி மீனாட்சி மற்றும் உறவினர்கள் எங்கள் பாதை வழியாக செல்லக்கூடாது என்றும், இது எங்களுடைய பட்டாவில் உள்ள பாதை என்று கூறி சாலையின் குறுக்கே கற்களை எடுத்து வைத்து வாகனங்கள் செல்லாமல் தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ராமராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அங்கு கற்கள் அகற்றப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story