மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய பன்றிகள்


மக்காச்சோள பயிரை சேதப்படுத்திய பன்றிகள்
x

ஆலங்குளம் அருகே 3 ஏக்கர் மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே 3 ஏக்கர் மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கருவேல மரங்கள்

ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் தேவியாறு உள்ளது. இந்த ஆற்றின் இரண்டு பக்கத்திலும் உள்ள கரைகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த வேலிமுள் காட்டுக்குள் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றது. இப்பகுதியில் உள்ள மேலாண்மறைநாடு, நரிக்குளம், வலையபட்டி, கீழாண்மறைநாடு, அருணாசலபுரம், கோவில் செந்தட்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்குள் பன்றிகள் புகுந்து சேதப்படுத்துகின்றன.

மக்காச்சோளம் சேதம்

இதனால் இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பன்றிகளுக்கு பயந்து சாகுபடி செய்வதற்கு பயப்படுகின்றனர். கீழாண்மறைநாடு கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரை பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஆதலால் பன்றிகளுக்கு பயந்து விவசாயிகள் கூடாரம் அமைத்து காடுகளில் காவல் இருந்து வருகின்றனர். எனவே மேலாண்மறைநாடு கிராமத்தில் உள்ள தேவியாற்றின் கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி அங்குள்ள வன விலங்குகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story