அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் மற்றும் தாளையடிகோட்டை கிராமத்தில் மருதவன மகாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி தாளையடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேல் குத்தியும், ரதம் குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடங்களை எடுத்து தாளையாடிகோட்டை பகுதி முழுவதும் ஊர்வலமாக வந்தனர். அதன்பின்னர் நயினார்கோவில் நகர் பகுதியில் முழுவதும் சுற்றி மருதவனம் மகாகாளியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நயினார்கோவில் பகுதியில் உள்ள மக்கள் பால்குடம் மற்றும் அக்னிச் சட்டி ஏந்தி அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பித்தனர்.


Next Story