பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி


பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணியை கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

பில்லூர் 3-வது குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணியை கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கோவை மாநக ராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிக ளுக்கு குடிநீர் வழங்கும் விதமாக பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.740 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிக ளை கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியுடன் குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவுபடுத்தப்பட் டது.

இதில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குழாய் பதிக்கும் பணி

இந்த திட்டத்தில் நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பிரதான நீரேற்று நிலையம் பில்லூர் அணையின் கீழ்புறம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு மொத்தம் 90.76 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்க வேண்டும். தற்போது வரை 41 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி முடிவுற்றுள்ளது.

இது 47 சதவீதம் ஆகும். குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் 93 சதவீதம் அளவிற்கு முடிவுற்று உள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

நிலம் கையகப்படுத்துதல்

சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளது. குழாய்கள் பதிக்கவும், பிரதான தரைமட்டதொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகும். 121 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை முடித்து இந்த திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story