குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரம்


குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரம்
x

குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரம்

திருப்பூர்

வெள்ளகோவில்

குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணி தீவிரம்

வெள்ளகோவில் நகராட்சி பகுதி திருவள்ளுவர் நகர் அடுத்த கல்லாங்காட்டுவலசு பிரிவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து விரிசல்கள் ஏற்பட்டு குடிநீரானது கசிந்தோடி வீணாகியது.குடிநீர் குழாயில் விரிசல்கள் ஏற்பட்டதை அடுத்து குடிநீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு தற்போது வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் நகர், கல்லாங்காட்டுவலசு பிரிவு, குமாரவலசு பகுதிக்கு செல்லும் மூன்று வீதிகளும் இணையும் சந்திப்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் விரிசல்கள் ஏற்பட்டதால் சில நாட்களாக அப்பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் பொழுது குழாயில் ஏற்பட்ட விரிசல்களில் இருந்து குடிநீரானது கசிந்து வீணாகி வந்தது. இதனால் வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் உத்தரவின் பேரில் நகர் மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார் தலைமையில் நகராட்சி பொறியாளர் திலீபன் மேற்பார்வையில் திருவள்ளுவர் நகர், கல்லாங்காட்டுவலசு பிரிவு சாலையில் உள்ள குழாய் அமைப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story