பைப் லைன் மூலம் குடி நீர் வழங்க வேண்டும்


பைப் லைன் மூலம் குடி நீர் வழங்க வேண்டும்
x

கூத்தாநல்லூர் அருகே, பொதக்குடியில் பைப் லைன் மூலம் குடி நீர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் ஜல் ஜீவன் திட்டம் மூலம், 2020-ம் ஆண்டு வீடுகளுக்கு குடிநீர் வழங்க பைப் லைன் போடப்பட்டது. இதில், பொதக்குடி ஊராட்சியில் உள்ள வார்டுகளில், 11 வார்டுகளில் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 3-வது வார்டில் மட்டும் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் குழாய்கள் முறையாக அமைக்கப்படாமல் குடிநீர் விநியோகம் வழங்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் "பொதக்குடி ஊராட்சியில் உள்ள 3 வது வார்டில் 100- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டம் மூலம் பொதக்குடியில் உள்ள 12 வார்டுகளுக்கும் குடிநீர் இணைப்பு பைப் லைன் பொருத்தப்பட்டு, 11 வார்டுகளிலும் குடிநீர் 2 வருடங்களாக குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 3- வது வார்டில் உள்ள கீழமணவாளி, அக்பர் தெரு, சத்தார் தெரு, கரிமியா லைன், மதினா தெரு ஆகிய தெருக்களில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வெயில் காலத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


Next Story