காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்


காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி-பரமக்குடி சாலையில் உள்ள இளையான்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் தண்ணீர் குளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர் வீணாவதால் அப்பகுதி மக்களுக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வினியோகம் ஆகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து இந்த உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story