பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்


பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்
x

பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிடாரி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். பிடாரி அம்மனுக்கு ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலைைய வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story