மரக்கிளையை வெட்டியபோது பரிதாபம்:மின்சாரம் தாக்கி முதியவர் சாவு


மரக்கிளையை வெட்டியபோது பரிதாபம்:மின்சாரம் தாக்கி முதியவர் சாவு
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மரக்கிளையை வெட்டியபோது மின்சாரம் தாக்கி முதியவர் இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திராநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 62). இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தின் கிளையை வெட்டினாராம். அப்போது, அந்த கிளை அருகே இருந்த மின்சார ஒயரில் அரிவாள் பட்டு உள்ளது. இதில் லட்சுமணன் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story