திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
ராணிப்பேட்டை
காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 9, 10-ந் தேதிகளில், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 23 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்களும் அதனை சார்ந்து இயங்கக்கூடிய உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி சுமார் 6 மாதம் நடைபெற்றது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு நேர்காணல் நடத்தப்படுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story