கலவை பள்ளி மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் இடம்

கலவை பள்ளி மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் இடம்
x

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கலவை பள்ளி மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. மாணவிக்கு சு.ரவி எம்.எல்.ஏ.நிதியுதவி வழங்கினார்.

ராணிப்பேட்டை

கலவை

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கலவை பள்ளி மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. மாணவிக்கு சு.ரவி எம்.எல்.ஏ.நிதியுதவி வழங்கினார்.

கலவையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி துர்காதேவிக்கு 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாணவி துர்காதேவிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி நிதியுதவி வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட மாணவரணி தலைவர் பிரபு, கலவை பேரூர் செயலாளர் சதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் அக்ரி பாலாஜி, மாவட்ட அவை தலைவர் நந்தகோபால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தாமோதரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மேதாஜி, நித்யா சக்தி, காமராஜ், யுவராஜ், தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story