வேலை வாய்ப்பு பயிற்சி


வேலை வாய்ப்பு பயிற்சி
x

முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் வரதராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், குளிர்சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளமிங், டிரைவர் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல் ஆகிய பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது.

பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தோர் விண்ணப்பம் வாயிலாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story