தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிகப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள அரசடி துணை மின்நிலையம், கொம்புக்கார நத்தம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறத. இதனால் அரசடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேலஅரசடி, கீழஅரசடி, சமத்துவ புரம், தருவைகுளம், பட்டினமருதூர், தருவைகுளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், மற்றும் எட்டயபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலும்,

கொம்புக்கார நத்தம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தா குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், ராமசாமி புரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கொல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story