ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சீரானமின் விநியோகம் கிடைக்க பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருகிறது. எனவே, ஸ்ரீவைகுண்டம் உப மின் நிலையம் சிவந்திப்பட்டி மின் தொடரில் கிளாக்குளம், குருக்கள்கோட்டை, வல்லக்குளம், அரசர்குளம், ஆகிய இடங்களிலும் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உபமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் பெரிய பள்ளிவாசல்தெரு, பெரும்பத்துத்தெரு, பெரியப்பள்ளிவாசல் நடுத்தெரு, மிராசுதார்தெரு, பிச்சனர்தோப்பு, மேலக்கோட்டை வாசல்தெரு, கிழக்கோட்டைவாசல் தெரு ஆகிய பகுதிகளில் இ்ன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
மேலும், மஞ்சள்நீர்க்காயல் உபமின்நிலையம் ஏரல் மின் தொடரில் ஏரல் பகுதிகளில் தளவாய்புரம், இடையர்க்காடு ஆகிய இடங்களிலும், செய்துங்கநல்லூர் லைன்டேப் உப மின் நிலையம் செய்துங்கநல்லூர் மின் தொடரில் ஆழிகுடி ஆகிய இடங்களிலும் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.