மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆச்சாள்புரம், எடமணல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்திலிருந்து வெள்ளமணல், மகேந்திரப்பள்ளி செல்லும் உயிர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், நல்லூர், நாணல் படுகை, வெள்ள மணல், மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோதண்டபுரம், முதலை மேடு, முதலை மேடு திட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை )காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது இந்த தகவலினை உதவி செயற் பொறியாளர் (வடக்கு) விசுவநாதன் தெரிவித்தார்.

இதே போல் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்திலிருந்து கூழையார் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எடமணல், வழுதலை குடி, ராதா நல்லூர், திருமுல்லைவாசல், தாழந் தொண்டி, ஆமப்பள்ளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது இந்த தகவலினை உதவி செயற் பொறியாளர் (தெற்கு) விஜயபாரதி தெரிவித்தார்.

திருநகரி, மங்கைமடம்

சீர்காழி மின்வாரிய உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் விஜய பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவெண்காடு 110 கிலோ வாட் மின் நிலையத்திற்கு உட்பட்ட திருநகரி உயர் அழுத்த மின் பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், திருநகரி, நெப்பத்தூர், திருக்குரவலூர், முள்ளி பள்ளம், மங்கை மடம், கீழ சட்டநாதபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story