இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x

வாசுதேவநல்லூர் பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

கடையநல்லூர் கோட்ட மின்வினியோக பிரிவு செயற்பொறியாளர் நாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட நாரணாபுரம் உபமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், உள்ளார், நெற்கட்டும் செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளானைகோட்டை, தாருகாபுரம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த கிராமங்களில் மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


1 More update

Next Story