நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

ஜலகண்டாபுரம், எட்டிகுட்டைமேடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சேலம்

சேலம் ஜலகண்டாபுரம், எட்டிகுட்டைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது. ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான்வளவு, கரிக்காப்பட்டி, சவுரியூர், கலர்ப்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, பாப்பம்பாடியில் ஒரு பகுதி, இருப்பாளி ஒரு பகுதி, எடையப்பட்டி, ராமிரெட்டிபட்டி. கன்னந்தோி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாபுரம், ஆா்.புதூா், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எட்டிகுட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், தப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டி. இந்த தகவலை செயற்பொறியாளா் தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.


Next Story