ரூ.72½ லட்சத்தில் புதிய திட்டப்பணிகள்
ரூ.72½ லட்சத்தில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசின்னாரிபாளையம் ஊராட்சி வீணம்பாளையம், அய்யாக்குட்டி வலசு ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
அதன்படி வடசின்னாரிபாளையம் ஊராட்சி வீணம்பாளையத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம், அய்யாக்குட்டி வலசில் புதிய அங்கன்வாடி கட்டிடம், செங்கோடம்பாளையம் ஊராட்சி கே.கே.எஸ்.நகரில் கான்கிரீட் சாலை அமைத்தல், அருள்ஜோதிநகர் 5-வது வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல், காசிலிங்கம்பாளையம் முதல் வீதியில் கான்கிரீட் சாலை அமைத்தல், அப்பியாபாளையம் புதுகாலனி 3-வது வீதி, அருள்ஜோதிநகர் 4-வது வீதி, காசிலிங்கம்பாளையத்தில் கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.72 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் 9 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.