இருளப்பட்டி ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
இருளப்பட்டி ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள குட்டைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு 100 நாள் பணியாளர்களை கொண்டு பராமரிக்க ஊராட்சி மன்ற தலைவர் குமார் திட்டமிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ காணியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குட்டை புறம்போக்கு நிலத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பாப்பிரெட்டிபட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமாரி கண்ணன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 100 நாள் திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அத்தி, நாவல், கொய்யா, வேம்பு, அரசன், புங்கன், மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரக்கன்றுகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தண்ணீர் ஊற்றுவது, களை பறிப்பது போன்ற பணிகளை செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் சேட்டு, மகளிர் குழுக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.