தனி நபரின் பயிர் சேதம் அடைந்தாலும் இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனி நபரின் பயிர் சேதம் அடைந்தாலும் இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

தனி நபரின் பயிர் சேதம் அடைந்தாலும் இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

தனி நபரின் பயிர் சேதம் அடைந்தாலும் இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை பேரிடர்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'சுற்றுச்சூழல் மாசு, புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் விவசாயத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.கனமழை, பருவம் தவறி பெய்யும் மழை, வறட்சி, வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன.அதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அரசால் அறிவிக்கப்படும் இந்த திட்டங்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் மூலமே செயல்படுத்தப்படுகின்றன.ஆனால் இந்த திட்டத்தில் விவசாயிகளை இணைக்கும் பொறுப்பு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களுக்காக அரசு சம்பளத்தில் பணியாற்றும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர்.மேலும் வங்கிகளில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இணைவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஏராளமான விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு பெருமளவு நிதி திரட்டப்படுகிறது.ஆனால் பயிர் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

காப்பீட்டு நிறுவனங்கள்

இயற்கை பேரிடர்களால் ஒருசில விவசாயிகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை.பல கிராமங்களை உள்ளடக்கிய பிர்கா அளவில் சேதம் ஏற்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் நிலை உள்ளது.உதாரணமாக பலத்த காற்றினால் பயிர் சேதம் ஏற்படும் சூழலில் காற்று வீசும் திசையிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.அதுபோல பலத்த மழையின் போது தாழ்வான பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.அத்துடன் வன விலங்குகள் ஒருசில விவசாயிகளின் நிலத்தை சேதப்படுத்துகின்றன.ஆனால் இவ்வாறு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை.ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் தனி நபர் காப்பீடு செய்யும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கிறது.ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட விவசாயியும் பணம் செலுத்தி காப்பீடு செய்தும் இழப்பீடு என்பது ஒட்டு மொத்த பிர்கா விவசாயிகளும் பாதிக்கப்பட்டால் மட்டுமே கிடைக்கும் என்பது நியாயமற்றதாகும்.இதற்கு அதிகாரிகள் ரேண்டம் முறையில் காப்பீட்டு நிறுவனங்கள் தேர்வு செய்யும் புல எண்களுக்கான நிலங்கள் பாதிப்படைந்திருந்தால் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குலுக்கல் முறையில் பரிசு கிடைக்கும் என்பது போல உள்ளது.எனவே ஒவ்வொரு தனிப்பட்ட விவசாயி பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

---

Next Story