மாவட்டத்தில் 7 லட்சம் மரக்கன்றுகள் நடவு


மாவட்டத்தில் 7 லட்சம் மரக்கன்றுகள் நடவு
x

மாவட்டத்தில் 7 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மாவட்டத்தில் 7 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் கிராமத்தில் ஆர்பர் தினம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இ்ந்த நிகழ்ச்சியை கலெக்டர்ஜெயசீலன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அப்போது கலெக்டர் ெஜயசீலன் பேசியதாவது:-

தமிழகத்தில் 21 சதவீதம் பசுமை பரப்பு உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பசுமையாக்கும் திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 6½ சதவீதம் பசுமை பரப்பளவு உள்ளது. அதனை அதிகரிக்கும் வகையில் வனத்துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் 7 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பருவமழை காலத்தில் நடவு செய்ய தேக்கு, வேம்பு, நெல்லி, வேங்கை, புங்கை, பூவரசு, மலை வேம்பு உள்ளிட்ட கன்றுகள் நாற்றங்கால்களில் தயார் நிலையில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக குன்னூர் கிராமத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

இதில் வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story