850 சோலை மரக்கன்றுகள் நடவு


850 சோலை மரக்கன்றுகள் நடவு
x
தினத்தந்தி 25 Sept 2023 2:30 AM IST (Updated: 25 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தலைகுந்தா, கீழ்கோத்தகிரி பகுதியில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 850 சோலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

நீலகிரி

ஊட்டி

தலைகுந்தா, கீழ்கோத்தகிரி பகுதியில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 850 சோலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடவு

ஊட்டி அருேக தலைகுந்தா மற்றும் கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நடவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக, பசுமை தமிழ்நாடு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு அரசு துறைகளின் மூலம் அதிகளவில் மரக்கன்றுகளை நட அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்டமாக தலைகுந்தா பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு கையேடு

நீலகிரி மாவட்டத்தில் தலைகுந்தா பகுதியில் 50 மரக்கன்றுகளும், கீழ்கோத்தகிரி பகுதியில் 800 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டு உள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள மண்ணின் தரத்துக்கு ஏற்ப சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் அருணா விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story