தோட்டக்கலைத்துறை சார்பில் பனை விதைகள் நடவு
தோட்டக்கலைத்துறை சார்பில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
தேவகோட்டை,
பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் பனை விதைகள் நடவு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பனை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக 2023-24 நிதியாண்டிற்கு பனை மேம்பாடு இயக்கம் வாயிலாக பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் நடவிற்கு 4 ஆயிரத்து 320 விதைகள் தேவகோட்டை வட்டாரத்திற்கும் 2 ஆயிரத்து 700 விதைகள் கண்ணங்குடி வட்டாரத்திற்கும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக நேற்று கண்ணங்குடி வட்டாரம் கண்டியூர் கிராமத்திலும் தேவகோட்டை வட்டாரத்தில் சக்கந்தி மற்றும் சிறுவத்தி கிராமங்களிலும் 500 பனை விதைகள் நடவுப் பணி தொடங்கப்பட்டது.
இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யா பனை விதைப்பு நடவு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர் தாரணிகா செய்திருந்தார்.