புதை உயிரிப்படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு


புதை உயிரிப்படிவ அருங்காட்சியக  வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு
x

வாரணவாசி கிராமத்தில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கடலாக இருந்ததாகவும், மண் முகடுகளில் படிவங்கள் அரிய வகை கற்படிவங்கள் மூலமாக கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இங்கு கிடைக்கும் புதை உயிரின படிவங்களை அருங்காட்சியமாக வாரணவாசி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் பழமரக்கன்றுகளான நாவல், புங்கன் மற்றும் சரக்கொன்றை மரங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.27 ஆயிரம் மதிப்பில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலெட்சுமி, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆகியோர் நட்டு வைத்தனர். இந்தநிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story