செல்வ கணபதி கோவிலில் நிலைகால் நடும் நிகழ்ச்சி
செல்வ கணபதி கோவிலில் நிலைகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி கலிபுல்லா நகர் காலனியில் புதிதாக செல்வ கணபதி கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு நிலைகால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லாலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு செல்வ கணபதி கோவில் நிலைகால் ஊன்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கல்லாலங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தற்போதைய ஒன்றிய கவுன்சிலருமான பிரகதா-ரத்தினவேல், நகர துணை செயலாளர் செங்கோல், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர் கமல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாாக விழாவிற்கு வந்த அமைச்சர் மெய்யநாதனை கலிபுல்லா நகர் காலனி பெண்கள் வரவேற்றனர்.
Related Tags :
Next Story