10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்


10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
x

வேலூர் பாலாற்றின் கரையோரம் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.

வேலூர்

வேலூர் பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பனை மரங்கள் நடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கருகம்புத்தூர் பாலாற்றில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பனை விதைகளும் சேகரிக்கப்பட்டன. அதன்படி 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

இந்த பணியை பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் மேற்கொண்டனர்.


Next Story