4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி


4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
x

பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் 4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் நடும் பணி நடந்தது. ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் காவேரிப்பாக்கம் ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் ஜெயந்தி பிச்சாண்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெரிய ஏரியின் கரை பகுதியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 4,500 பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் ஜெயந்தி மோகன், ஊராட்சி செயலாளர் அருள்பாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story