5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி


5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி
x

ஓட்டேரி ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் ஓட்டேரி பசுமை குழு, மக்கள் களப்பணி குழு சார்பில் ஓட்டேரி ஏரிக்கரையோரம் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். 53-வது வார்டு கவுன்சிலர் பாபிகதிரவன் முன்னிலை வகித்தார்.

பனை விதைகளை கலெக்டர் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர் ரவிசங்கர், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்ப பதிவுகள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story