கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு


கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு
x

கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கல்லூரி புல முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, பனை விதைகளை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் தங்கும் விடுதி, கேண்டீன் வளாகம், விளையாட்டு மைதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் ஸ்வீட் டிரஸ்ட் இளைஞர்கள் சேர்ந்து 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர்.

1 More update

Next Story