பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடிகள்


பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடிகள்
x

கூத்தாநல்லூர் அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடிகளை விரைவில் வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடிகளை விரைவில் வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோம்பூர் பாசன வாய்க்கால்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, கீழபனங்காட்டாங்குடியில், வெள்ளையாற்றில் இருந்து பிரிந்து கோம்பூர் பாசன வாய்க்கால் செல்கிறது . வெள்ளையாற்றில் இருந்து வரும் தண்ணீரை இந்த பாசன வாய்க்கால் மூலம் கொண்டு சென்று கீழபனங்காட்டாங்குடி, கோம்பூர், கானூர், வடகட்டளை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் நெல், உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

தூர்வார கோரிக்கை

இந்த நிலையில் இந்த கீழபனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் முகப்பில் வாய்க்காலின் நடு மையத்தில் அடர்ந்த செடிகள் சூழ்ந்து, அங்கு பாசன வாய்க்கால் உள்ளதா? என்று நினைக்கும் வகையில் காணப்படுகிறது. மேலும், கருவேல மரங்கள் படர்ந்து காடு போலவும் காட்சியளிக்கிறது. பாசன வாய்க்கால் இடை இடையே ஆக்கிரமிப்பு சூழ்ந்து சில இடங்களில் குறுகலான நிலைக்கு மாறி வருகிறது. இதனால், பாசன வாய்க்காலில் முறையான அளவில் தண்ணீர் வருவது தடுக்கப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோம்பூர் பாசன வாய்க்காலில் செடி, கொடிகளை வெட்டி அகற்றி வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story