விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
x

தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை மாாிமுத்து எம்.எல்.ஏ. வழங்கினாா்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அம்மனூர் ஊராட்சியில் 25 நபர்களுக்கு ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மா, கொய்யா, எலுமிச்சை, தேக்கு, மாதுளை கருவேப்பிலை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் தோட்டக்கலைத்துறை அதிகாரி மற்றும் வேளாண்துறை உதவி இயக்குனர் சுவாமிநாதன், வேளாண்துறை அதிகாரிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள 25 பேருக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பெற்று சென்றனர்.


Next Story