பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில்  29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)
நாமக்கல்

பிள்ளாநல்லூர், பொத்தனூர் பேரூராட்சிகளில் 29 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

26 கிலோ பிளாஸ்டிக்

ராசிபுரம் அருகே பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி கடை, பூக்கடை ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பிள்ளாநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து ரூ.1,200 அபராதம் விதித்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆய்வில் துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொத்தனூர்

பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் அங்குள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட சுமார் 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது இளநிலை உதவியாளர் ஜெயசேகர், வரி வசூலர் குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story