பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி அருகே உள்ள இலவங்கார்குடி ஊராட்சியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


Next Story