பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
நாகமங்கலம் கிராமத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், நாகமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் ஆனந்த ஜோதி பூராசாமி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
நாகமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தினர். பேரணி நாகமங்கலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. முடிவில் ஊராட்சி செயலர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story