பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
x

அருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிளாஸ்டிக்பொருட்கள்

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பதை குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பேரணி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

அதேபோல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

மனித சங்கிலி

இந்தநிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சுழி சாலையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேவாங்கர் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story