பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

கம்பத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தேனி

கம்பம் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலமுருகன் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக மீண்டும் 'மஞ்சப்பை' திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் சுகாதார அலுவலர் சுந்தராஜன், சுகாதார ஆய்வாளர்கள் லெனின், சுருளியப்பன், கவுன்சிலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story