புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

புரவிபாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோயம்புத்தூர்

நெகமம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், புரவிபாளையம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மண்ணையும் சுற்றுச்சூழலையும் காக்கும் பொருட்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம். அவற்றை பயன்படுத்துவதையும், விற்பதையும் தவிர்ப்போம் தெருக்களில் குப்பைகளை வீசுவதை கைவிடுவோம் நம் இல்லம் தேடி வரும் தூய்மை பணியாளரிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகள் ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் புரவிபாளையம் ஊராட்சியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புரவிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எல்.நாகேந்திரன் கலந்து கொண்டு பேரணி தொடங்கி வைத்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் புரவிபாளையம் ஊராட்சி செயலர் கே.குமார் நன்றி கூறினார்.


Next Story