பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வாணியம்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரியம், இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, பூமி அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மாராத்தன் ஓட்டம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் இலியாஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து தமிழக அரசின் மஞ்சள் பை திட்டத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் அங்கு வந்திருந்தவர்களுக்கு மஞ்சள் பைகளை அதிகாரிகள் வழங்கினர்.
Related Tags :
Next Story