பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

திட்டச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப்படையின் சார்பில் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் .பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை .வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தானம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு, திருமருகல் இல்லம் தேடி கல்வியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனா். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


Next Story